EPFO... ரூ.50,000 உடனே உங்கள் வங்கியில் வந்து சேரும்... மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு...!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎப்ஓ 6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு வரும் இபிஎப்ஓ, சமீபத்தில் பயனர்களுக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுவது போன்ற கோரிக்கைகளுக்கு முன்பணம் பெற ஆட்டோ - மோட் செட்டில்மென்ட் எனப்படும் தானியங்கி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி விண்ணப்பித்த மூன்றே நாட்களில் பணம் கைக்கும் கிடைக்கும் என்று பிஎப் நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் தான் புதிய அறிவிப்பு ஒன்றை தொழிலாளர் வருங்கால வைப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது. இனி வரும் காலங்களில் திருமணம், உயர்கல்வி, வீடு, கட்டுமானம் போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே முன்பணம் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இபிஎப்ஓ வாடிக்கையாளர்கள் மற்றும் சந்தாதாரர்களுக்கு ஒரு முறையான ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தை வழங்குகிறது, இது வேலைக்குப் பிறகு நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஆனால் சந்தாதாரர்கள் அறியாத சில இபிஎப்ஓ விதிகள் உள்ளன.இந்த விதிகளில் ஒன்றுதான் 50 ஆயிரம் பலன் தரும் திட்டம். இந்த விதி மூலம் ஒரு ஊழியர் ரூ.50,000 வரை நேரடி பலன் பெறுகிறார், ஆனால் ஒரு நிபந்தனை உள்ளது.
புதிய விதி:
மத்திய அரசு, 1995ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) திருத்தம் கொண்டு உள்ளது. ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவையில் உள்ள ஊழியர்களுக்கு withdrawal benefits எனப்படும் திரும்பப் பெறும் பலன்களை வழங்குகிறது. பல்வேறு துறைகளில் பணிகளில் உள்ள சராசரியாக 7 லட்சம் பேருக்கும் அதிகமானோர் சந்தோசம் அடையும் வகையில் இபிஎப்ஓ விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. நாடு முழுக்க உள்ள ஊழியர்களுக்கு இதற்கான செய்தியை மத்திய அரசு அனுப்பி உள்ளது.
ஒவ்வொரு மாதத்திற்கான சேவையும் கணக்கில் எடுத்துக் கொள்வதையும், வழங்கப்படும் சேவையின் விகிதத்தில் withdrawal benefits பலன்கள் வழங்கப்படுவதையும் உறுதிசெய்யும் வகையில், அட்டவணை D ஐயும் மத்திய அரசு மாற்றியுள்ளது. அட்டவணை D என்பது திட்டத்தின் தகுதிக்கு தேவையான சேவையை வழங்காத உறுப்பினர்கள் அல்லது 58 வயதை எட்டிய உறுப்பினர்களைக் குறிக்கிறது.