முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எளிமையின் அடையாளம்.. தகைசால் தமிழர்.. 100-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் தோழர் நல்லக்கண்ணு..!! யார் இவர்..?

Entered politics at the age of 18 and is still teaching politics till the age of 100. Nallakannu's birthday today.
10:50 AM Dec 26, 2024 IST | Mari Thangam
Advertisement

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு இன்று டிசம்பர் 26ஆம் தேதி தனது 100ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் தோழர் நல்லக்கண்ணு என்று அழைத்து வாழ்த்து கூறி வருகின்றனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல மனிதராக நல்லகண்ணு போற்றப்படுகிறார்.

Advertisement

எளிமையான தலைவர் நல்லக்கண்ணு. திருநெல்வேலி அருகே, ஸ்ரீவைகுண்டம் நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். இளம்வயது முதலே பொது மற்றும் சேவைப்பணிகளில் ஆர்வம் கொண்ட நல்லகண்ணு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து நாட்டின் விடுதலைக்காக சிறை சென்றவர்.

15 வயது இருக்கும் போதே, நல்லகண்ணு இடதுசாரி இயக்கச் செயல்பாடுகளில் தீவிர ஆர்மாக இருந்தவர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பஞ்சம் நிலவிய காலகட்டங்களில் இரண்டாயிரம் நெல் மூட்டையை ஒருவர் பதுக்கிவைத்துள்ளார் என்பதை அறிந்து ஜனசக்தி என்னும், இந்திய கம்ய்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையில் எழுதி, அதை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். தந்தையிடம் சொல்லாமல் எளிய மக்களுக்கான போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றவர் நல்லக்கண்ணு.

18 வயதில் அரசியல்: தனது 18வது வயதில் அதிகாரப்பூர்வமாக தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகாரப்பூர்மாக இணைத்துக் கொண்டார். ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி சுற்றுவட்டார பட்டியல் இன மக்களின் வாழ்வினை மேம்படுத்த கணிசமான போராட்டங்களை முன்னெடுத்தார். சாதியற்ற சமூகத்தை உருவாக்கத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் நல்லகண்ணு. நல்லகண்ணு ரஞ்சிதம் அம்மாளை இளவயதில் திருமணம் முடித்தார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ரஞ்சிதம் அம்மாள், ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளித்தலைமை ஆசிரியையாக இருந்து ஓய்வுபெற்றார். தமிழக அரசின் அம்பேத்கர் விருதையும் தகைசால் தமிழர் விருதையும் பெற்றுள்ளார் தோழர் நல்லக்கண்ணு.

முக்கிய போராட்டம் : உணவுத்தட்டுப்பாடு இருந்த சமயம். ஆனால், உணவுப்பொருள் பதுக்கல் ந்டந்திருக்கிறது என்பது தோழர் நல்லக்கண்ணுவின் கவனத்துக்கு வருகிறது. அந்த இடத்துக்குப் பத்தினிக் கோட்டம் என்று பெயர். இதற்குள் ஆண்கள் பிரவேசிக்கக் கூடாது என்பது ஊர்க்கட்டுப்பாடு. இதைப் பயன்படுத்தி நெல் முட்டைகள் பதுக்கப்பட்டன. ஆர்.டி.ஓவுக்கு உடனடியாகக் கடிதம் எழுதி அலுவலர்களை வரவழைத்து அதிகாரிகள் துணையுடன், ஆயிரம் மூட்டைகள் பதுக்கப்பட்ட நெல்லை வெளிக்கொண்டு வந்தார்.

தாமிரபரணி நதியை மணல் மாஃபியாக்களிடமிருந்து பாதுகாத்தார் நல்லகண்ணு. அதற்காக உயர் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி, அவரே வாதாடினார். இந்த வழக்கில் தாமிரபரணியில் மணல் அள்ளத் தடைவிதித்தது நீதிமன்றம்.

27 வயதில் முதல் ஆயுள் தண்டனை : நல்லகண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது நெல்லை சதி வழக்கு என்ற பெயரில் வழக்கு போடப்பட்டது. மத்திய, மாநில அரசுகளைக் கவிழ்க்க பொது வேலைநிறுத்தங்களுக்குத் தூண்டிவிடுவது, ஆயுதம் தாங்கிய புரட்சியை நடத்துவது, அதற்காக மாவட்டம் முழுவதும் வன்முறை மூலம் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது, அதற்குத் தடையாக இருப்பவர்களைத் தீர்த்துக்கட்டுவது, தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆயுதப்பயிற்சி அளிப்பது, வெடிகுண்டுகள் தயாரிப்பது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன.

1952ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நல்லகண்ணு உள்ளிட்ட பலருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை பொதுவெளியில் பொதுவுடைமைக் கொள்கைகளுடன் மக்கள் பிரச்சைனைகளுக்காகப் போராடி வருகிறார். 

Read more ; தங்கம் விலை ஒரே நாளில் அதிரடி உயர்வு..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Tags :
நல்லக்கண்ணுமூத்த கம்யூனிஸ்ட் தலைவர்
Advertisement
Next Article