முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Insurance: பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு 27% அதிகரித்துள்ளது...!

08:46 AM Mar 07, 2024 IST | 1newsnationuser2
Advertisement

நடப்பாண்டில் இதுவரை பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு 27% அதிகரித்துள்ளது.

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட கடந்த 8 ஆண்டுகளில் - 56.80 கோடி விவசாயிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 23.22 கோடிக்கும் மேற்பட்ட விவசாய விண்ணப்பதாரர்கள் உரிமைகோரல்களைப் பெற்றுள்ளனர். இந்தக் காலகட்டத்தில், சுமார் ரூ.31,139 கோடியை விவசாயிகள் தங்கள் பங்காகச் செலுத்தியுள்ளனர். இதில் ரூ.1,55,977 கோடிக்கு மேல் உரிமைக் கோரிக்கைகள் அவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள் செலுத்தும் ஒவ்வொரு 100 ரூபாய் பிரீமியத்துக்கும், அவர்களுக்கு சுமார் ரூ.500 இழப்பீட்டுத் தொகையாகக் கிடைத்துள்ளது.

Advertisement

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தேவை அடிப்படையிலான திட்டமாகும். இது மாநிலங்கள் மற்றும் விவசாயிகளின் தன்னார்வ அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டுகளில் விவசாயிகளின் விண்ணப்பங்கள் எண்ணிக்கை முறையே 33.4% மற்றும் 41% அதிகரித்துள்ளது. மேலும், 2023-24-ம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளின் எண்ணிக்கையில் இதுவரை 27% அதிகரித்துள்ளது. மேலும், 2023-24-ம் நிதியாண்டில் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட மொத்த விவசாயிகளில் 42% பேர் கடன் பெறாத விவசாயிகள் ஆவர்.

Advertisement
Next Article