’ஆங்கில வழிப் பள்ளிகள் தற்கொலைக்கு நிகரானது’..!! எச்சரிக்கும் என்சிஇஆர்டி இயக்குநர்..!!
ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் தற்கொலைக்கு நிகரானது என NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் கூறுகையில், ”நீண்ட காலமாகவே ஆங்கிலவழிக் கல்வி மீது பெற்றோருக்கு ஒரு ஈர்ப்பு, மோகம் அதிகம் உள்ளது. அரசுப் பள்ளிகளில் தற்போது தரமான கல்வி வழங்கப்படுகிறது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாதபோதிலும், ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் என்பது தற்கொலைக்கு நிகரானது.
பெற்றோர்களின் இந்த மனநிலையை மாற்றி, தாய்மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்கவே புதிய தேசிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தாய்மொழியில் கல்வி கற்கவில்லை என்றால் நமது பாரம்பரியம், கலாசார வோ்களை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? ஒடிசாவில் இரு பழங்குடியின மொழிகளில் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு கதைகள் மற்றும் பாடல்கள் வடிவில் கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
121 மொழிகளில் புத்தகங்கள் தயாா் செய்யப்பட்டு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் அவர்களால் கலாசார வோ்களை அறிந்துகொள்ள முடியும். ஆங்கிலவழிப் படிப்புகளில் அதிகளவு பாடங்கள் திணிக்கப்படுகின்றன. இது மாணவர்களிடம் அறிவு இழப்புக்கு வழிவகுக்கிறது. தற்போது பலமொழிக்கல்வி மூலம் மீண்டும் நமது பாரம்பரியம் நிலைநிறுத்தப்படவுள்ளது” என்றாா்.
Read More : உலகம் முழுவதும் மீண்டும் பரவ தயாராகும் கொடிய வைரஸ்..!! மரணம் நிச்சயம்..!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!!