முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Engineering Counselling | இதர சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்..!!

Engineering counseling for other special category students starts today.
07:56 AM Jul 25, 2024 IST | Mari Thangam
Advertisement

தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் மே மாதம் 6ம் தொடங்கியது. அதன்படி அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக வளாக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்காக விண்ணப்பதாரர்கள்  தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர்.

Advertisement

அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் பிஇ, பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2 லட்சத்து 9 ஆயிரத்து 545 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, இறுதியாக ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 27 வரை நடைபெறும் என்றும், அதன் பிறகு ஜூலை29 முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அதன்படி, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 தொடங்கியது.

இந்த நிலையில் பொது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று ( ஜூலை 25) தொடங்குகிறது. இதில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 8,948 இடங்கள் உள்ள நிலையில், கலந்தாய்வில் பங்கேற்க 416 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். விளையாட்டு பிரிவில் 456 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், 2,113 மாணவர்கள் பங்கேற்கின்றனர். முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிகள் பிரிவில் உள்ள 143 இடங்களுக்கு 1,243 மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கி 28-ம் தேதி வரை இதர சிறப்புபிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். நாளை ( வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம். 27ம் தேதி தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தற்கால ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு, அதனை அன்றைய தினம் 7 மணிக்குள் உறுதி செய்யும் மாணவர்களுக்கு 28ம் தேதி இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்.

Read more | காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் இருக்கா? ஆபத்து.. இத கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!!

Tags :
engineering counsellingstudenttamilandu
Advertisement
Next Article