For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளிலேயே இவ்வளவு விண்ணப்பங்களா?

06:23 AM May 07, 2024 IST | Baskar
பொறியியல் கலந்தாய்வு  முதல்நாளிலேயே இவ்வளவு விண்ணப்பங்களா
Advertisement

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர 20,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

Advertisement

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) நேற்று வெளியான நிலையில், 2024-2025ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, (மே. 6) முதல் ஜூன் 6 வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

மேலும் மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையம் சென்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஓ.சி., பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, டி.என்.சி பிரிவினருக்கு ரூ 500, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ 250 பதிவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் 20,097 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement