For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை..!! தரவரிசைப் பட்டியல்..!! இந்த தேதியை நோட் பண்ணிக்கோங்க..!!

The certificate verification will be conducted from 13th to 30th June. The rank list will be released on July 10.
09:00 AM Jun 07, 2024 IST | Chella
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை     தரவரிசைப் பட்டியல்     இந்த தேதியை நோட் பண்ணிக்கோங்க
Advertisement

தமிழ்நாட்டில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள். இவை ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அந்த வகையில், 2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கியது.

Advertisement

இதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. 2,48,848 பேர் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 439 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். அதில், 1 லட்சத்து 76 ஆயிரத்து 145 பேர் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிவடைந்துள்ள நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கனவே வெளியிட்ட பொறியியல் மாணவர் சேர்க்கை காலஅட்டவணையின்படி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12 ஆகும். ஜூன் 12ஆம் தேதி அன்று ரேண்டம் நம்பர் எனப்படும் சமவாய்ப்பு எண் மாணவர்களுக்கு ஆன்லைனில் ஒதுக்கப்படும்.

பிறகு ஜூன் 13 முதல் 30 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். ஜூலை 10ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். பிறகு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு இணையவழியில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : பங்குச்சந்தை முதலீட்டில் ரூ.30 லட்சம் கோடியை இழக்க பிரதமர், அமித்ஷாவே காரணம்..!! குண்டை தூக்கிப்போட்ட ராகுல் காந்தி..!!

Tags :
Advertisement