For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Bitcoin மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.98 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

06:14 PM Apr 18, 2024 IST | Mari Thangam
bitcoin மோசடி   நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ 98 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
Advertisement

பண மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள பிரபல நடிகை ஷில்பா செட்டி மற்றும் அவருடைய கணவரின் 98 கோடி ரூபாய் மதிப்புள்ளான சொத்துக்கள் அமலாக்க துறையினர் முடக்கியுள்ளனர். 

Advertisement

2017ஆம் ஆண்டு பிட் காயின் மூலம் 6,600 கோடி மோசடி செய்ததாக வேரியபிள் டெக் நிறுவனம் மீது டெல்லி போலிஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிறுவனத்தை அஜய் பரத்வாஜ், விவேக் பரத்வாஜ், சிம்பி பரத்வாஜ், மகேந்தர் பரத்வாஜ் மற்றும் மறைந்த அமித் பரத்வாஜ் ஆகியோர் நடத்தி வந்த நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவுசெயப்பட்டது. இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த விசாரணையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு இந்த மோசயில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆபாச திரைப்படங்களை தயாரித்து அதை வெளிநாட்டில் உள்ள பணக்காரர்களுக்கு விற்ற வழக்கில் ராஜ் குந்திரா சிறை சென்றார். அவரை போராடி ஷில்பா ஷெட்டி அண்மையில் ஜாமீனில் வெளியே கொண்டு வந்தார். இந்நிலையில் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குதிராவிற்கு சொந்தமான சுமார் 97.79 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க துறையினர் தற்பொழுது முடக்கி இருப்பது பாலிவுட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் பிட்காயின் உருக்கு ஆலை அமைக்க ராஜ் குந்த்ரா 285 பிட்காயின்களை அமித் பரத்வாஜியிடமிருந்து வாங்கியதாக கூறப்படுகிறது.  இன்னும் அந்த பிட்காயின் ராஜ் குந்த்ராவிடம் தான் இருப்பதாக கூறப்படுகிறது.  அதன் மதிப்பு ரூ.150 கோடி என்று அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராக்கு சொந்தமான 97.79 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.  இதில் ஷில்பா ஷெட்டி பெயரில் மும்பை ஜுகுவில் இருக்கும் வீடு,  புனேயில் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்களா மற்றும் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்குகள் என அனைத்தும் அடங்கும்.  பிட்காயின் மோசடியில் கிடைத்த பணத்தில் தான் இந்த வீடுகள் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement