மோடி அரசில் வேலைவாய்ப்பு சாதனை படைத்துள்ளது!… வேலையில்லா திண்டாட்டம் இல்லை!… பொருளாதார நிபுணர்!
Surjit Bhalla: கடந்த 7-8 ஆண்டுகளில் சுமார் 10 மில்லியனைத் தொட்டு, நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் சராசரியாக, முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று IMF-இன் இந்தியாவின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் பொருளாதார நிபுணருமான சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த் பேட்டியில், 2004-2013 (யுபிஏ ஆட்சிக் காலத்தில்) மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வேலைகள் உருவாக்கப்பட்டதாகவும், அப்போதுதான் 'வேலையில்லா வளர்ச்சி' என்ற சொல் உருவானதாகவும் கூறினார். மோடி அரசாங்கத்தின்கீழ் வேலைவாய்ப்பு உருவாக்கம் சாதனையில் மிக அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்ட பல்லா, இந்திய வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சராசரியாக பல வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கடந்த 7-8 ஆண்டுகளில் சுமார் 10 மில்லியன் வேலைகள் உருவாகியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் வேலையற்ற இளைஞர்களின் பங்கு கிட்டத்தட்ட 83 சதவீதமாக இருந்ததாக அறிக்கை வெளியிட்ட சமீபத்திய சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)க்கு பதிலளித்த பல்லா, 29 வயதிற்குப் பிறகு இளைஞர்களின் தரவுகளைப் பார்த்தால், இந்தியாவில் வேலையின்மை விகிதம், மக்கள்தொகையில் அதிகம், பெரும்பாலான பணியாளர்கள் எங்கோ 1 சதவீதமாக உள்ளனர், இது உண்மையில் வேலையின்மை விகிதம் இல்லை என்றும் இளைஞர்கள் அவர்களுக்கு ஏற்ற சிறந்த வேலை தேடுகின்றனர் என்று குறிப்பிட்டார்.
மேலும், அன்னிய நேரடி முதலீடு குறைந்து வருவது தொடர்பான சர்ச்சை இருந்தால் அதற்கு அமையவுள்ள புதிய அரசின் கொள்கையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் "இப்போது, நான் ஒரு வெளிநாட்டு முதலீட்டாளராக இருந்தால், நான் ஏன் அந்த அபாயத்தை எடுக்க வேண்டும்? மேலும் உலகில் வேறு எங்கும் இது போல் இல்லை என்று நான் நினைக்கிறேன்," என்று பல்லா கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, 2023-24 ஏப்ரல்-ஜனவரியில் 61.7 அமெரிக்க டாலராக இருந்த மொத்த அந்நிய நேரடி முதலீடு 59.9 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 12.5 சதவிகிதப் பங்கில் இருந்து 2023 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 1.7 சதவிகிதமாக மட்டுமே சீனாவுக்கான அன்னிய நேரடி முதலீடு வியத்தகு அளவில் குறைந்துள்ளது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, பிரேசில், போலந்து மற்றும் ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகள் சீனாவுக்கான அன்னிய நேரடி முதலீடு குறைந்ததைத் தொடர்ந்து உலகளாவிய பங்கில் கணிசமான லாபத்தை கண்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
Readmore: செம்பு vs மண் பானை தண்ணீர்..!! எது நிறைய நன்மைகளை தரும்..? கோடை வெயிலுக்கு சிறந்தது எது..?