தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு... மொத்தம் 2,438 காலியிடங்கள்...! உடனே விண்ணப்பிக்கவும்..!
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தெற்கு இரயில்வேயில் பிட்டர், எலக்ட்ரீசியன், வெல்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், கார்பெண்டர், டீசல் மெக்கானிக், டர்னர், மெசினிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு 2438 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.9,000 மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆகஸ்ட் 12-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
For More Info : https://sr.indianrailways.gov.in/