For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு..!! நவ.30ஆம் தேதியே கடைசி..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே முந்துங்கள்..!!

04:55 PM Nov 21, 2023 IST | 1newsnationuser6
சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு     நவ 30ஆம் தேதியே கடைசி     சம்பளம் எவ்வளவு தெரியுமா    உடனே முந்துங்கள்
Advertisement

செங்கல்பட்டு மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள சமூகப் பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 30ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Advertisement

இந்த பணியிடம் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மாதம் ஒன்றிற்கு ரூ.18,536/- வரை தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு 10, 12ஆம் வகுப்புடன் சமூகப்பணி/சமூகவியல் / சமூக அறிவியில் ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி தொடர்பான பணிகளில் ஏற்கனவே பணிபுரிந்திருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும், 42 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கக் கூடாது. மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள், chengalpattu.nic.in என்ற மாவட்ட இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து கல்வி, வயது மற்றும் முன் அனுபவம் குறித்த சான்றிதழ்களின் நகல்களுடன் நவ.30ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி;

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். A80, 10வது குறுக்குத் தெரு, அண்ணாநகர், செங்கல்பட்டு - 603001

Tags :
Advertisement