For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தோட்டக்கலைத்துறையில் வேலைவாய்ப்பு..!! ரூ.76,000 வரை சம்பளம்..!! நாளையே கடைசி..!! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!!

07:27 AM Dec 23, 2023 IST | 1newsnationuser6
தோட்டக்கலைத்துறையில் வேலைவாய்ப்பு     ரூ 76 000 வரை சம்பளம்     நாளையே கடைசி     டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Advertisement

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர் நிலையில் மொத்தம் 263 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே (டிசம்பர் 24) கடைசி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கத் துறையில் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை துணைப் பணியில் உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகிய பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள டிசம்பர் 29 நள்ளிரவு 12.01 முதல் டிசம்பர் 31 இரவு 11.59 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

பிப்ரவரி 7ஆம் தேதி இதற்கான தேர்வு கணினி முறையில், காலை மற்றும் மாலையில் நடைபெறவுள்ளது. குறிப்பாக தமிழ் மொழி தகுதித் தேர்வும் பொதுப் பிரிவுக்கான தேர்வும் நடைபெறவுள்ளது. 18 வயது முதல் 32 வயது வரையிலான நபர்கள் இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். எனினும் எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி முஸ்லிம்கள் மற்றும் ஆதரவற்ற கைம்பெண்களுக்கு வயது வரம்பு எதுவும் இல்லை.

பணியிடங்கள்

உதவி வேளாண்மை அலுவலர் - 79+ 5

உதவி தோட்டக்கலை அலுவலர் - 148 + 31

மொத்தம் - 263 பணியிடங்கள்

ஊதியம் : ரூ.20,600 – ரூ.75,900 வரை

விண்ணப்பக் கட்டணம்

டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுத ஒரு முறை விண்ணப்பப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இதற்கு ரூ.150 செலுத்த வேண்டும். ஒரு முறை பதிவு செய்தால், 5 ஆண்டுகளுக்கு முன்பதிவு செல்லுபடியாகும். தொடர்ந்து தேர்வுக்கான கட்டணமாக ரூ.100-ஐச் செலுத்த வேண்டும். இதில் எஸ்சி/ எஸ்சி அருந்ததியர்கள் / எஸ்டி, கைவிடப்பட்ட கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கட்டணம் எதையும் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு மையங்கள் :

இதற்கான தேர்வு மையங்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளன.

விண்ணப்பிப்பது எப்படி?

-- முதலில் தேர்வர்கள் ஒரு முறை பதிவு (One Time Registration) செய்துகொள்ள வேண்டும்.

-- தொடர்ந்து https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

-- தேர்வர்கள் முழுமையான விவரங்களைப் பெற https://www.tnpsc.gov.in/Document/english/26_2023-English.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணைய முகவரி https://www.tnpsc.gov.in/

Tags :
Advertisement