முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரபல ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! அதுவும் ’Work From Home’..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

07:33 AM May 14, 2024 IST | Chella
Advertisement

பிரபல ஐடி நிறுவனத்தில் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையில் சாப்ட்வேர் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Advertisement

தற்போது பலருக்கும் ஐடி நிறுவனங்களில் பணி செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதனால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்டவை தவிர வேறு படிப்பை முடித்தவர்களும் கூட தனியே ஐடி வேலைக்கு தேவையான கோர்ஸை படித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது பல்வேறு ஐடி நிறுவனங்களில் இருந்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் 'யே குளோபல்' (Yeah Global) சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Yeah Global சார்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில், தற்போது இந்தியாவில் சாப்ட்வேர் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இந்த பணி என்பது Remote முறையை கொண்டதாகும். அதாவது வீட்டில் இருந்து தான் பணியாற்ற வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இளங்கலை படிப்பு அல்லது அதற்கு நிகரான தொழில்நுட்ப படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு ப்ரோகிராம் லேங்குவேஜ்களான சி, சி , சி#, ஜாவா, ஜாவா ஸ்கிரரிப்ட் அல்லது பைத்தான் உள்ளிட்டவற்றை கற்று பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பிக் டேட்டா மற்றம் ஸ்ட்ரீமிங் பிளாட்பார்ம்ஸ்களான Storm, Hadoop, Cosmos உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாத சம்பளம் பற்றிய எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும், இந்த பணி தொடர்பான அறிவிப்பு வெளியாகி சில நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் தற்போது வரை விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லதாகும். ஏனென்றால், விண்ணப்ப காலக்கெடு எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Yeah Global இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: https://yeahglobal.zohorecruit.in/jobs/Careers/96768000000732402/Software-Engineer---India?source=CareerSite

Read More : Wipro நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! ரூ.8 லட்சம் வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!!

Advertisement
Next Article