கழிவறையில் ஃப்ளஷ் செய்ய மறந்த ஊழியர்!... பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட அவலம்!… வைரலாகும் பதிவு!
டெல்லியில் நிறுவனம் ஒன்றில் கழிவறை சென்றுவிட்டு ஃப்ளஷ் செய்ய மறந்துவிட்டதால் பணியில் சேர்ந்த முதல்நாளிலேயே ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான பதிவு இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
இதுதொடர்பாக அந்த நபர் Reddit பதிவில், திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு வழிவகுத்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து விவரித்துள்ளார். அதாவது, அந்த நபர் வேலையில் சேருவதற்கு முந்தயநாள் இரவில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதாகவும், மது அருந்தியதாகவும் இதனால் அவரது உடல் அசௌகரியம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு, ஏராளமான டாய்லெட் பேப்பர்களை பயன்படுத்தியதாகவும், பின்னர் கழிவறையை பயன்படுத்திவிட்டு அதை ஃபளஷ் செய்யாமல் மறந்து சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, கழிவறையை பயன்படுத்த சென்ற ஒரு பெண், கழிவறை அசுத்தமற்ற முறையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அலுவலக மேலாளரிடம் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இருப்பினும், அந்த நபர் தனது வேலையில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு ஆவணங்களை முடித்தார். ஆனால் அலுவலக ஊழியர்கள் கழிப்பறையைப் பற்றி வருத்தப்பட்டனர். இதையடுத்து, கழிவறையில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.