முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்தோனேஷியாவில் தடம்பதிக்கும், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை!

08:14 PM May 20, 2024 IST | Mari Thangam
Advertisement

இந்தோனேசியாவின் மிகப்பெரிய பாலி தீவு பகுதியில் வசித்து வரும் மக்கள் பயனடையும் வகையில் தனது ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவையை எலான் மஸ்க், ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் அந்த நாட்டுக்கு பயணித்தார்.

Advertisement

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் சமூக ஊடக தளமான எக்ஸ்-ன் உரிமையாளர் எலான் மஸ்க். உலகின் பெரும் பணக்காரர். இவர் தற்போது உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டங்களை கொண்ட நாடான இந்தோனேசியாவில் தடம் பதித்துள்ளார். தனது ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவையை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். பாலியின் தலைநகர் டென்பசாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எலான் மஸ்க்குடன் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவும் பங்கேற்றார்.

இதன் மூலம் சுமார் பல ஆயிரம் தீவு பகுதிகளைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொலை தூரங்களில் உள்ள அந்தப் பகுதிகளில் அதிவேக இணைய சேவையை வழங்குகிறது ஸ்டார்லிங்க். இதன் தொடக்க விழாவில் இணைய சேவையின் வேகமும் பரிசோதிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத் தலைவர் மஸ்க் கூறுகையில், “தொலைதூர மருத்துவ உதவிகளுக்கு இது மிகவும் உதவும். இணையவழி கல்வி பெறவும் நல்வாய்ப்பாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இணைய சேவைக்கான பயன்பாடு கிடைத்தால் யார் வேண்டுமானாலும் தங்களது தயாரிப்புகளை உலகில் விற்பனை செய்ய முடியும். இது மக்களுக்கு சிறந்த வகையில் பயன் தரும் என நான் நம்புகிறேன்” என்றார்.

ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது நடைமுறைக்கு வந்தால் டவர் (செல்போன் சிக்னல் கோபுரங்கள்) சார்ந்த நெட்வொர்க் சிக்கல்களை பயனர்கள் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது..!

Advertisement
Next Article