முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"விரைவில் ரோபோ டாக்சி சோதனை ஓட்டம்" எலான் மஸ்கின் அடுத்த அதிரடி..!

01:09 PM May 12, 2024 IST | Mari Thangam
Advertisement

டெஸ்லாவின் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டென்ஸ் பேக்கேஜை சீனாவில் ரோபோ டாக்ஸிகளில் நிறுவி சோதனை செய்ய எலான் மஸ்க் கூறியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து டெஸ்லா CEO எலான் மஸ்க் கூறுகையில், தனது நாட்டில் ரோபோ டாக்ஸிகளை பரிசோதிக்குமாறு டெஸ்லாவை சீனா வரவேற்றுள்ளது. இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என்றார்.

சீன அரசு அதிகாரிகள் ரோபோ டாக்ஸியின் ஃபுல் செல்ஃப் டிரைவிங்- எப்எஸ்டி இயக்கத்துக்கு உடனடியாக அனுமதி அளிக்கவில்லை. எப்எஸ்டி இயக்கத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு முன்பாக டெஸ்லாவின் கார்களில் டிரைவர் அசிஸ்டென்ஸ் அம்சங்களை பரிசோதித்து உரிய டேட்டாக்களை சேகரித்து அனுமதி பெற வேண்டும். ஷாங்காயில் ரோபோ டாக்ஸியை அறிமுகப்படுத்த டெஸ்லா அனுமதி கோரியுள்ளதாக சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து டெஸ்லாவும் ஷாங்காய் நகர அரசும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த மாதம் சீன ப்ரீமியர் லீ ஜியாங்குடன் நடைபெற்ற சந்திப்பை அடுத்து டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் இந்த ரோபோ டாக்ஸி அறிவிப்பை வெளியிட்டார். தனது சீன பயணத்தின்போது எப்எஸ்டி இயக்கம் குறித்து விவாதிக்க இருந்ததாகத் தெரிகிறது. உரிய அரசு அனுமதிகளைப் பெற்று டேட்டா டிரான்ஸ்பர் செய்யப்பட்டால் அது மஸ்க்கின் திட்டத்துக்கு ஏதுவாக இருக்கும்.

டெஸ்லாவின் மாடல் 3 மற்றும் ஒய் கார்களில் டேட்டா செக்யூரிட்டி ஒழுங்குமுறைகள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் டெஸ்லா கார்களை சீனாவின் பல்வேறு பகுதிகளில் அனுமதிக்க லோக்கல் அரசுகளுக்கு வழிவகுக்கும். இதற்கு முன்பு இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

பைடுவுடன் டெஸ்லா ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் சீனாவின் மிகப் பெரிய டெக் நிறுவனத்தின் மேப்பிங் லைசன்ஸை வைத்து சீனாவின் பொது சாலைகள் பற்றிய டேட்டாக்களை பயன்படுத்தலாம். இதைத் தொடர்ந்து எப்எஸ்டி இயக்கத்துடன் கூடிய ரோபா டாக்ஸிகளை டெஸ்லா சீனாவில் இயக்க முடியும்.

Advertisement
Next Article