மனித மூளைக்குள் நியூராலிங்க் சிப்.. க்ரீன் சிக்னல் கொடுத்த கனடா..!! புதிய சாதனை படைக்கும் எலான் மஸ்க்..
எலோன் மஸ்க் நிறுவிய மூளை சிப் நிறுவனமான நியூராலிங்க், கனடாவில் தனது முதல் மருத்துவ பரிசோதனையைத் தொடங்க ஒப்புதல் பெற்றுள்ளது.
நம் மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்போது அதை சரி செய்ய மூளையில் சிப் பொருத்தினால் என்ன நேரும்? மருத்துவ உலகில் குறிப்பாக நரம்பியல் மருத்துவத்தில் பெரும் சவாலாக இருக்கும் நோய்களுக்கு தீர்வு காணக் கூடியதாக இருக்கும் இந்தக் கேள்விக்கு செயல் வடிவம் கொடுக்கும் முன் ஆயத்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது எலான் மஸ்கின் நியூராலிங் நிறுவனம்.
நியூராலிங்க் நிறுவனம் தான் வடிவமைத்துள்ள எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும் கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை தொடங்கியுள்ளது. எலோன் மஸ்க் நிறுவிய மூளை சிப் நிறுவனமான நியூராலிங்க், கனடாவில் தனது முதல் மருத்துவ பரிசோதனையைத் தொடங்க ஒப்புதல் பெற்றுள்ளது.
பக்கவாதம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவர்களின் எண்ணங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் சாதனங்களைக் கட்டுப்படுத்த உதவுவதே இந்த சோதனையின் நோக்கமாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகள் வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது. தற்போது கனடாவில் தனது முதல் மருத்துவ பரிசோதனையைத் தொடங்க ஒப்புதல் பெற்றுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை ரொறன்ரோ பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பில் நடைபெறும். அறுவை சிகிச்சையின் சிக்கலான தன்மை மற்றும் துல்லியத்தின் அவசியத்தை மருத்துவமனை வலியுறுத்தியது. ஹெல்த் கனடா, ஒழுங்குமுறை அமைப்பானது, ஒப்புதல் குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. அமெரிக்காவில் நடத்தப்பட்ட முந்தைய சோதனைகளில், நியூராலிங்க் அதன் மூளைச் சிப்பை இரண்டு நோயாளிகளுக்கு பொருத்தியுள்ளது. ஒரு நோயாளி வீடியோ கேம்களை விளையாடுவதற்கும் 3D வடிவமைப்பைக் கற்றுக்கொள்வதற்கும் உள்வைப்பை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார், அதன் சாத்தியமான பயன்பாடுகளை நிரூபிக்கிறார்.
நியூராலிங்க் என்றால் என்ன? ஏஎல்எஸ் அல்லது கழுத்து பகுதியில் ஏற்பட்ட பாதிப்பால் பக்கவாத பாதிப்புக்கு ஆளான நோயாளிகளின் மூளையில் சிப் பொருத்தப்படும். இதன் மூலம் அவர்களது எண்ணத்தின் அடிப்படையில் கணினியின் கர்சர் மற்றும் கீபோர்டு கட்டுப்படுத்தப்படும். சுமார் ஆறு ஆண்டு காலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். இப்போதே சோதனைகள் வெற்றிகரமாக நடந்தாலும் கூட இதுபோன்ற ஒரு 'சிப்' சந்தைக்கு வர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிப் பொருத்துவதன் மூலம் அவர்களால் எழுந்து நடக்க முடியும். மட்டுமல்லாது மூளையிலிருந்து வரும் சமிஞ்சைகளை பயன்படுத்தி அவர்களால் கம்ப்யூட்டரையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more ; டிகிரி இல்லாமலேயே லட்சத்தில் சம்பளம் கிடைக்கும் வேலைகள்..!! என்னென்ன தெரியுமா?