For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குழந்தைகளை பெற்றுக்கொண்டே இருக்கும் எலான் மஸ்க்..!! 3 குழந்தைகளுக்கு தாயான ஷிவான் ஜில்லிஸ்..!! இவர் யார் தெரியுமா..?

In 2021, Tesla CEO Elon Musk and Shivan Gillies gave birth to their twins, son Strider and daughter Azuri.
12:59 PM Jul 01, 2024 IST | Chella
குழந்தைகளை பெற்றுக்கொண்டே இருக்கும் எலான் மஸ்க்     3 குழந்தைகளுக்கு தாயான ஷிவான் ஜில்லிஸ்     இவர் யார் தெரியுமா
Advertisement

கடந்த 2021ஆம் ஆண்டு டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கும் ஷிவான் ஜில்லிஸ்ஸும் தங்களது இரட்டைக் குழந்தைகளான மகன் ஸ்ட்ரைடர், மகள் அஜுரி ஆகியோரை பெற்றெடுத்தனர். இந்தாண்டு அவர்களுக்கு 3-வது குழந்தை பிறந்தது. இது தவிர வெவ்வேறு பெண்களுடன் சேர்ந்து எலான் மஸ்க் 9 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார். முன்னதாக, எலான் மஸ்க் தனக்கு விந்து கொடையளிப்பதாகக் கூறியதாக ஜில்லிஸ் கூறினார். யாருமே சுத்தமில்லை. நான் மனித சமூகத்துக்கு பிரகாசமான எதிர்காலத்தை தர முயற்சிக்கிறேன் என்று ஒரு முறை எலான் மஸ்க் கூறியிருந்தார்.

Advertisement

கனடாவின் ஒன்டாரியாவில் பிறந்து வளர்ந்தவர் ஷிவான் ஜில்லிஸ். யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவம் படித்துள்ளார். படிக்கும் காலத்தில் கல்லூரியின் ஐஸ் ஹாக்கி அணியிலும் கத்திச் சண்டையிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், எலான் மஸ்க்கின் ஓபன் ஏஐ நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டபோது ஜில்லிஸும் மஸ்க்கும் சந்தித்துக் கொண்டனர். மெஷின் லேர்னிங் மற்றும் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸில் ஜில்லிஸ் நல்ல திறனைக் கற்றுக் கொண்டார். அவரது தொழில் பயணம் ஐபிஎம்மில் தொடங்கியது.

பின்னர் அவர் புளூம்பெர்க் பீட்டாவில் சேர்ந்தார். புளூம்பெர்க்கில் இருந்து 2016இல் ஓபன் ஏஐக்கு மாறினார். படிப்படியாக அந்நிறுவனத்தின் இளம்வயது டிரைக்டராக ஜில்லிஸ் ஆனார். இந்த நிறுவனம் மஸ்க்குக்குச் சொந்தமானது. இப்போது மஸ்க்கின் மற்றொரு கம்பெனியான நியூராலிங்க்கில் எக்ஸிகியூட்டிவ்வாக உள்ளார். நியூராலிங்க் மைக்ரோசிப் தயாரிக்கும் நிறுவனமாகும். அந்த நிறுவனத்தில் ஸ்பெஷல் புராஜக்ட்ஸ்களுக்கான டிரைக்டராக இருக்கிறார். விமானங்கள், பாதுகாப்புத் தொழில்நுட்பத்துக்கு ஏற்ற ஏஐ புரோகிராம்களை நியூரோலிங்க் உருவாக்கி வருகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜில்லிஸும் மஸ்க்கும் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தனர். அதேவேளையில் கிரைம்ஸ் என்ற பெண் மூலமாக மஸ்க்குக்கு ஒரு குழந்தை பிறந்தது. 2024இல் ஜில்லிஸ்ஸுக்கும் மஸ்க்குக்கும் 3-வது குழந்தை பிறந்தது. அது பெண்ணா ஆணா என்ற விவரம் தெரியவில்லை. இவ்வாறு அதிக குழந்தைகள் பெற்றெடுப்பதன் மூலம் உலகில் மக்கள் தொகை குறைவாக இருப்பதை சமாளிக்க முடியும். புத்திசாலித்தனமான மனிதர்கள் அதிக குழந்தைகள் பெற்றால் அவர்களும் புத்திசாலிகளாக ஆகி இந்த சமுதாயத்துக்கு உதவியாக இருக்கும் என்று எலான் மஸ்க் கூறுகிறார்.

Read More : மக்களே..!! இந்த தவறை செய்தால் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் மேல கஷ்டம் வரும்..!!

Tags :
Advertisement