முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரேசிலில் X தள அலுவலகத்தை மூடிய எலான் மஸ்க்..!! என்ன காரணம் தெரியுமா?

06:29 PM Aug 18, 2024 IST | Mari Thangam
Advertisement

சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க கோரி நீதிபதி பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து பிரேசிலில் உள்ள எக்ஸ் அலுவலகத்தை மூடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

Advertisement

உலகின் பல்வேறு நாடுகளில் எக்ஸ் சமூகவலைதளம் செயல்பாட்டில் உள்ளது. இந்த வலைதளத்தில் முன்னாள் அதிபர் ஜெயிர் பொல்சினேரோவுக்கு ஆதரவான தீவிர வலதுசாரி கருத்துக்கள், வெறுப்புணர்வு கருத்துக்கள், போலி செய்திகளை நீக்கும்படி அந்த நிறுவனத்திற்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சான்டிரி டி மொரேஸ் உத்தரவிட்டார்.

மேலும், உத்தரவை கடைபிடிக்கவில்லையென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பிரேசிலில் செயல்பட்டு வரும் எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சட்ட நிபுணரை கைது செய்வோம் என்றும் நீதிபதி மொரேஸ் மறைமுக எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் பிரேசிலில் உள்ள எக்ஸ் தள அலுவலகத்தை மூடுவதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ; 'பிரேசிலில் அலுவலகத்தை மூடுவதற்கான முடிவு கடினமானது. ஆனால் நீதிபதியின் ரகசிய தணிக்கை மற்றும் தனிப்பட்ட தகவல் பரிமாற்ற கோரிக்கைகளுக்கு நாங்கள் ஒப்புக்கொண்டிருந்தால், இந்த முடிவை எடுத்துள்ளோம் ' என தெரிவித்தார்.

இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவையடுத்து பிரேசிலில் செயல்பாடுகளை எக்ஸ் நிறுவனம் நிறுத்தி உள்ளது. அலுவலகம் மூடப்பட்டாலும் தொடர்ந்து எக்ஸ் வலைதள பக்கம் பிரேசிலில் செயல்பாட்டிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; மத்திய காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்..!! 17 பேர் பலி

Tags :
brazilElon Musk
Advertisement
Next Article