For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எலான் மஸ்க், பில்கேட்ஸ் ஆகியோர் படுகொலை செய்யப்படுவார்கள்!… அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல்!

09:50 AM Jan 05, 2024 IST | 1newsnationuser3
எலான் மஸ்க்  பில்கேட்ஸ் ஆகியோர் படுகொலை செய்யப்படுவார்கள் … அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல்
Advertisement

அமெரிக்க வர்த்தக அதிபர்களான எலான் மஸ்க், பில் கேட்ஸ் மற்றும் சத்யா நாதெல்லா ஆகியோர் படுகொலை செய்யப்படுவார்கள் என்று அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக இந்தியா டுடே, ஓபன் சோர்ஸ் இன்டலிஜென்ஸ் (OSINT) குழு, அல்-கொய்தா அமைப்பினருடன் இணைந்து வெளியிடப்பட்ட செய்திகளின்படி, காசா பகுதியில் 20,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற இஸ்ரேலின் தொடர்ச்சியான போருக்கு ஆதரவளிப்பதன் காரணமாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எங்களது இலக்கில் இருப்பதாக (OSINT) குழுவின் ஊடகப் பிரிவு அல்-மலாஹேம் வீடியோ ஒன்றில் கூறினார். மேலும், யூதர்களை ஆதரிப்பதன் காரணமாக எலான் மஸ்க், பில்கேட்ஸ் மற்றும் முன்னாள் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் பென் பெர்னான்கே ஆகியோர் அமெரிக்க பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தையில் அவர்களின் செல்வாக்கு காரணமாக பயங்கரவாதிகளின் இலக்கில் உள்ளனர் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த வீடியோவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யா நாதெல்லா மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மருடன் இணைந்து அல்-கொய்தா அனுதாபிகளை குறிவைத்தது தொடர்பாக பில்கேட்ஸின் பேச்சும் இடம்பெற்றுள்ளது.

அல்-கொய்தாவின் ஊடகப் பிரிவான அல் மலாஹெம் மீடியாவால், டிசம்பர் 31 அன்று "பாலஸ்தீன அரசை மீட்டெடுப்பதற்காக" வீடியோவாக வெளியிடப்பட்டது. அமெரிக்க போர் இயந்திரம்" இஸ்லாமிய உலகில் பேரழிவை கட்டவிழ்த்துவிட்டதாக குற்றம் சாட்டியது மற்றும் அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய முஸ்லிம்களை பழிவாங்க அழைப்பு விடுத்தது. மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உட்பட உலகத் தலைவர்களை சந்தித்தது மற்றும் "இஸ்லாமுக்கு எதிரான போரில்" மேற்கு நாடுகள் கூட்டு சேர்ந்ததாக குற்றம் சாட்டியது.

Tags :
Advertisement