For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புயலால் தடைபட்ட இடங்களில் விரைந்து மின்சாரம் வழங்க வேண்டும்...! தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு...!

06:53 AM Dec 09, 2023 IST | 1newsnationuser2
புயலால் தடைபட்ட இடங்களில் விரைந்து மின்சாரம் வழங்க வேண்டும்     தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு
Advertisement

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துடன் ஒருங்கிணைந்து மின்சாரம் தடைபட்ட இடங்கள் / தெருக்களைக் கண்டறிந்து, மீதமுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.

Advertisement

இது குறித்து தலைமைச் செயலாளர்களின் தொல்ல செய்தி குறிப்பு; புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், நகரின் ஏனைய பகுதிகளிலும் சாலைகள்/தெருக்கள் மற்றும் திறந்தவெளிகளை போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்த வேண்டும். தூய்மைப்படுத்திய பின்னர், பிளீச்சிங் பவுடரை தூவ வேண்டும். பூச்சிக்கொல்லி தெளித்தல், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

இதுவரை வெள்ளம் வடியாமலுள்ள ஒவ்வொரு தெருவையும் பட்டியலிட்டு, நீரை வெளியேற்றுவதற்கான திட்டத்தை வகுக்கவும். இன்று மாலைக்குள் அனைத்து தெருக்களிலும் நீரையகற்றி இயல்பு நிலையை மீட்டெடுக்க வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துடன் ஒருங்கிணைந்து மின்சாரம் தடைபட்ட இடங்கள் / தெருக்களைக் கண்டறிந்து, மீதமுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். இலை தழைகள் மற்றும் முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட வேண்டும்.

மேலும், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று மேலாண்மை தொடர்பாக, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணித்து ஒருங்கிணைத்தல். குடிநீர் விநியோக நிலையங்கள் மற்றும் கழிவுநீரகற்று நிலையங்களை கணக்கெடுத்து, அவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்துடன் இணைந்து செயல்படுவதுடன், கூடுதல் பணியாக கழிவுநீர் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கும் ஜெட் ரோடிங் இயந்திரங்கள், அதிக திறன் கொண்ட உறிஞ்சி இயந்திரங்கள் மற்றும் கழிவுநீரகற்றும் கொள்கலன் ஊர்திகளை (sewerage Tankers) ஏனைய இடங்களிலிருந்து வரவழைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரியவாறு பயன்படுத்த வேண்டும்.

ஏனைய மாவட்டங்களிலிருந்து பெறப்படும் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு முறையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் விநியோகிக்கப்பட வேண்டும். பால் விநியோகம் மற்றும் பிற இன்றியமையாப் பொருட்களின் இருப்பினைக் கணக்கிடுங்கள். யாதொரு வணிகரும் நிர்ணயிக்கப்பட்ட உயரளவு விற்பனை விலையைக் (MRP) காட்டிலும் கூடுதல் விலையில் பொருட்களை விற்பனை செய்வதில்லை என்பதை உறுதி செய்யவும். நிர்ணையிக்கப்பட்ட உயரளவு விற்பனை விலையைக் (MRP) காட்டிலும் அதிக விலை வைத்து பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும்.

பொதுமக்களின் நலன்கருதி, தோட்டக்கலை மற்றும் கூட்டுறவு துறை 150 நடமாடும் காய்கறி கடைகளை திறந்துள்ளது. காய்கறிகளுடன் சேர்த்து பாலையும் அவர்கள் விற்பனை செய்வார்கள். தேவையுள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் இவை கிடைப்பதற்கான வழிகளை உறுதி செய்யவும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மருத்துவ முகாம்களின் செயல்பாட்டினை கண்காணிக்க வேண்டும்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வரும் திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் திறக்கப்படும். எனவே, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் முறிந்து விழுந்த மரங்களும், மரக்கிளைகளும் அகற்றப்பட வேண்டும். அனைத்து பொதுகழிப்பறைகளும், சமுதாய கழிப்பறைகளும் சுகாதாரமான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தெருவிளக்குகள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement