For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திருமண மண்டபங்கள், அரங்குகளுக்கு மின் கட்டணம் உயர்வு..!! விளக்குகளுக்கு தனி மின் இணைப்பு..!! தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி..!!

Reports have emerged that electricity charges for wedding halls and venues are set to increase.
07:49 AM Jan 15, 2025 IST | Chella
திருமண மண்டபங்கள்  அரங்குகளுக்கு மின் கட்டணம் உயர்வு     விளக்குகளுக்கு தனி மின் இணைப்பு     தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி
Advertisement

திருமண மண்டபங்கள், அரங்குகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் திருமண மண்டபங்கள், பெரிய வளாகங்கள் ஆகியவற்றிற்கு மின் கட்டணம் 5% உயர்த்தப்பட உள்ளது. இதற்காக சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. பெரிய அலங்கார விளக்குகள், அதிக மின்சாரத்தில் இயங்கும் விளக்குகளுக்கு தனி மின் இணைப்பு பெற்றிருக்க வேண்டும். அப்படி, தனி இணைப்பு பெறவில்லை என்றால் மின்வாரியம் விதிக்கும் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் 13,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், மண்படங்களில் ஆய்வுகள் செய்யப்படவில்லை. அங்கு விரைவில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடரந்து இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுன் அரசின் நிதிப்பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், நலத்திட்டங்கள், வாக்குறுதிகள் என அனைத்திற்கு நிதியை ஒதுக்க வேண்டியுள்ளது.

இது தவிர இயற்கை பேரிடர்களுக்கும் தமிழக அரசு நிதியை விடுவித்து வருகிறது. இதன் காரணமாக மின்கட்டணம் உள்ளிட்டவற்றை அரசு உயர்த்தியுள்ளது. தற்போது நிதிப்பற்றாக்குறையை போக்க மின்துறை, திருமண மண்டபங்கள், அரங்கம் உள்ளிட்டவற்றுக்கான மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. விரைவில் தெளிவான விலை நிர்ணயம் மற்றும் விதிகள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

Read More : தங்க சுரங்கத்தின் நுழைவாயிலை மூடிய போலீஸ்..!! உணவு, தண்ணீரின்றி 36 பேர் சடலமாக மீட்பு..!! பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டும் அபாயம்..?

Tags :
Advertisement