For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மின்சார வாகனங்கள் பேட்டரி மின்னேற்றி நிலையம்... உரிமம் தேவையில்லை...! மத்திய அரசு தகவல்

07:18 AM Dec 05, 2024 IST | Vignesh
மின்சார வாகனங்கள் பேட்டரி மின்னேற்றி நிலையம்    உரிமம் தேவையில்லை     மத்திய அரசு தகவல்
Advertisement

மின்னேற்றி நிலையம் மூலம் மின்சார வாகனங்கள் பேட்டரி மின்னேற்றம் செய்வதற்கு மின்சார சட்டம் 2003-ன் கீழ் உரிமம் தேவையில்லை.

Advertisement

மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றி உள்கட்டமைப்பு குறித்து 2018 ஏப்ரல் 13 அன்று மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தின்படி, மின்னேற்றி நிலையம் மூலம் மின்சார வாகனங்கள் பேட்டரி மின்னேற்றம் செய்வதற்கு மின்சார சட்டம் 2003-ன் கீழ் உரிமம் தேவையில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டது.

நிதி ஆயோக் 2022-ம் ஆண்டில் பொது ஆலோசனைக்காக வரைவு பேட்டரி மாற்றுக் கொள்கையை வெளியிட்டது. பேட்டரி இடமாற்றம் என்பது ஒரு மாற்றாகும். இது மின்னேற்றம் செய்யப்பட்ட பேட்டரிகளுக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை பரிமாறிக்கொள்வதை உள்ளடக்கியது மற்றும் அவற்றை தனித்தனியாக மின்னேற்றம் செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. வரைவு பேட்டரி மாற்றுக் கொள்கையின் விவரங்கள் நித்தி ஆயோக்கின் https://www.niti.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் அளித்த தரவுகளின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் மின்சார வாகனங்களின் மொத்த உற்பத்தி ஆண்டு வாரியாக அளிக்கப்பட்டுள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் 92.17 ஆயிரம் பயணிகள் மின்சார வாகனங்களும், 8.66 ஆயிரம் வணிக மின்சார வாகனங்களும், 632.78 ஆயிரம் மூன்று சக்கர மின்சார வாகனங்களும், 948.42 ஆயிரம் இரு சக்கர மின்சார வாகனங்களும் உற்பத்தி செய்யப்பட்டன.

Tags :
Advertisement