சென்னை வாசிகள் கவனத்திற்கு...! ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை மின்சார ரயில்கள் ரத்து..!
ஜூலை 23 முதல் 2024 ஆகஸ்ட் 14 வரை 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2024 ஜூலை 23 முதல் 2024 ஆகஸ்ட் 14 வரை 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் இந்த 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.
ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள் தொடர்பான முழு விவரங்கள்;
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.50 வரை 10 நிமிட இடைவேளையில் இயக்கப்பட்ட அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. இதே போன்று இரவு 7.19 மணியில் இருந்து நள்ளிரவு 11.59 மணி வரையில் 10 நிமிட இடைவேளையில் இயக்கப்பட்டு வந்த ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதே போன்று மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு 10 நிமிட இடைவேளையில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 10.30 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரையில் ரத்து செய்யப்படுகின்றன.இதில் திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயிலும் மொத்தமாக 23 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தை பொறுத்தவரை கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 08.55 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்பட்ட 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.