சிங்கபெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் இயக்கப்படாது..!
செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால், சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கம்2 மணிநேரமாக செங்கல்பட்டில் ரயில்கள் இல்லாததால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்வோர் தவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2 மணி நேரமாக செங்கல்பட்டில் புறநகர் ரயில்கள் இல்லாததால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். திருமால்பூரில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரை செல்லும் ஒரு ரயில் மட்டுமே வந்ததால், அந்த ரயிலில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இந்த நிலையில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திலேயே நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சிங்கபெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் இயக்கப்படாது என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.