புதிய அப்டேட்...! 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாக்காளர் கல்வி...! மத்திய அரசு தகவல்...!
மத்திய அரசின் கல்வி அமைச்சகம், தேர்தல் ஆணையம் ஆகியவை 2023 நவம்பர் 2- ம்தேதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது தேர்தல் நடைமுறை குறித்து பள்ளி, கல்லூரி கல்வியில் இடம்பெற செய்வதற்கான ஒப்பந்தமாகும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கங்களில் ஒன்று, இளம் குடிமக்களுக்கு நாட்டின் தேர்தல் முறை குறித்து முழுமையாகத் தெரிந்திருக்கச் செய்வதும், வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கும், ஒவ்வொரு தேர்தலிலும் ஆர்வத்துடனும், தகவலறிந்த மற்றும் நெறிமுறையான முறையிலும் பங்கேற்பதற்கான விருப்பத்தை அவர்களிடம் வளர்ப்பதும் ஆகும்.
6 முதல்12-ம் வகுப்புகளுக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் ஒரு பகுதியாக வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் கல்வியறிவை ஒருங்கிணைக்க என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்துதல், புதுப்பித்தல், அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வயது வந்தோர் கல்விக்கான பாடத்திட்ட கட்டமைப்பில் வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் கல்வியறிவை பொருத்தமாக ஒருங்கிணைக்கவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. ஆசிரியர் கல்வி பாடப்புத்தகத்தில் பாடப் பொருளைச் சேர்ப்பதன் மூலம் ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் இது கூடுதலாக இருக்க வேண்டும்.
மேலும் வகுப்பறை பாடத்திட்டம் தவிர, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்தல் எழுத்தறிவு மன்றங்கள் மற்றும் ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலும் ஜனநாயக அறைகள் மூலம் மாணவர்களிடையே விழிப்புணர்வை பரப்புதல், இணை பாடத்திட்ட நடவடிக்கைகள், பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு பொருத்தமான பல்வேறு வகையான ஊடகங்கள் மூலம் தேர்தல் கல்வியறிவு குறித்த தகவல் தகவல்களை பரப்புதல், மாணவர்கள் வாக்களிக்க உறுதிமொழி எடுத்தல், மாதிரி வாக்கெடுப்புகளை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றையும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்-விவிபாட் செயல்விளக்கங்கள், தேர்தல் ஆணைய மொபைல் பயன்பாடுகள் பற்றிய தகவல்கள், கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்கத் தேர்தல்களில் சுதந்திரமான, நியாயமான மற்றும் நெறிமுறை வாக்களிப்பதற்கான நடைமுறைகளை வளர்ப்பது போன்றவையும் கற்றுத்தரப்படவுள்ளது என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.