Elections 2024: கங்கனா ரனாவத் பாஜக சார்பில் போட்டி..! பிரதமர் மோடிக்கு நன்றி..!
பாஜக தலைமை 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் பெயரும் உள்ளது. அதன்படி நடிகை கங்கனா ரனாவத் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.
கங்கனா ரனாவத்தை தவிர, இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில், டாக்டர் ராஜீவ் பரத்வாஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்காக எப்போதும் குரல் கொடுத்து வரும் கங்கனா ரனாவத்தின் அரசியல் அறிமுகம் இதுவாகும்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கங்கனா ரனாவத் தெரிவித்திருப்பதாவது, "எனது அன்புக்குரிய பாரதம் மற்றும் பாரதிய ஜனதாவின் சொந்தக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எப்போதும் எனது நிபந்தனையற்ற ஆதரவைக் கொண்டுள்ளது, இன்று பாஜகவின் தேசியத் தலைமை என்னை எனது பிறந்த இடமான இமாச்சலப் பிரதேசமான மண்டி (தொகுதி) மக்களவை வேட்பாளராக அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்த உயர் கட்டளையின் முடிவிற்கு நான் கட்டுப்படுகிறேன். கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்ததில் நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். தகுதியான காரியகர்த்தாவாகவும் நம்பகமான பொது ஊழியராகவும் இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி" என்ரூ தெரிவித்திருக்கிறார்.
நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட்டில் கேங்க்ஸ்டர் படத்தின் மூலம் திறமையான நடிகைகளில் ஒருவராக முத்திரை பதித்தார். பின்னர் அவர், அவை ஃபேஷன், தனு வெட்ஸ் மனு, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை, தலைவி உள்ளிட்ட பல வெற்றிப் படங்கலில் நடித்துள்ளார்.
தற்போது அவர் நடித்துள்ள எமர்ஜென்சி படம் ஜூன் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையைச் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் 1975 ஆம் ஆண்டு நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தினார், பெயருக்கு ஏற்றார் போல், படம் அந்த கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. கங்கனாவைத் தவிர, அனுபம் கெர், ஷ்ரேயாஸ் தல்படே, மஹிமா சவுத்ரி மற்றும் மறைந்த நடிகர் சதீஷ் கௌஷிக் ஆகியோர் நடித்துள்ளனர். நடிப்பு மட்டுமின்றி இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்கியுள்ளார்.