Election | ”ரொம்ப வருத்தமா இருக்கு”..!! மநீம கட்சியில் இருந்து விலகிய டாக்டர் அனுஷா ரவி..!! அதிர்ச்சியில் கமல்..!!
வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சி இடம்பெறும் என்று கூறப்பட்ட நிலையில், முதல் இரண்டுகட்ட பேச்சுவார்த்தையில் ஒரு தொகுதி மட்டும் கமல்ஹாசன் கட்சிக்கு கொடுக்கப்படும் என்றும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் உள்ஒதுக்கீட்டில் ஒரு தொகுதியைப் பெற்று அதில் போட்டியிடலாம் என்று கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியும் கை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து பேசியதில், 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதெனவும், வரும் 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு மநீம கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தான், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில பரப்புரை செயலாளர் டாக்டர் அனுஷா ரவி அறிவித்துள்ளார். கமல்ஹாசனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”மக்கள் நீதி மய்யம் கட்சியில் 3 ஆண்டுகள் பயணம் செய்ததில் மகிழ்ச்சி. இருப்பினும் தேர்தல் அரசியலில் மநீம பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
Read More : Seeman | 14 மருத்துவர்கள், 4 பேராசிரியர்கள்..!! வேட்பாளர்களை அதிரடியாக களமிறக்கும் நாம் தமிழர்..!!