For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆந்திர சட்டபேரவைத் தேர்தல்: 'தேர்தலில் பின்னடைவு' வாடிய முகத்துடன் வெளியேறிய ரோஜா!

english summary
03:32 PM Jun 04, 2024 IST | Mari Thangam
ஆந்திர சட்டபேரவைத் தேர்தல்   தேர்தலில் பின்னடைவு  வாடிய முகத்துடன் வெளியேறிய ரோஜா
Advertisement

ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் ஒய்.ஆர்.சிபி கட்சி வேட்பாளராக ரோஜா போட்டியிட்ட நிலையில் அங்கு 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கிய நிலையில் ரோஜா வாடிய முகத்தோடு வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேறினார்.

Advertisement

மக்களவைத் தேர்தலுடன் இம்முறை ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டசபைத் தேர்தல்களும் நடைபெற்றன. இதில் நமது அண்டை மாநிலமான ஆந்திராவுக்குக் கடந்த மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டன. இன்று லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், அத்துடன் ஆந்திர சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழக எல்லையருகே உள்ள ஆந்திராவின் நகரி தொகுதியில் அமைச்சர் ரோஜா பின்னடைவில் உள்ளார்.ஆந்திர மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்து முடிந்தது. இந்த இரண்டு தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்றது.இதில் சட்டசபை தேர்தலில் சுற்றுசூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான நடிகை ரோஜா, நகரி சட்டசபை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.

ஏற்கனவே, இந்த தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற ரோஜா தற்போது மூன்றாவது முறையாக களமிறங்கினார். இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் நடிகை ரோஜா பின்தங்கியுள்ளார்.  27,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கிய நிலையில் ரோஜா வாடிய முகத்தோடு வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேறினார்.அவரை எதிர்த்து 2 முறை தோல்வி அடைந்த தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பானு பிரகாஷ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தற்போது இந்த தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

Read more ; ’தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி’..!! ஆந்திர அரசியலை திருப்பிப் போட்ட அந்த கைது..!!

Tags :
Advertisement