For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி...! இஸ்ரேல் பிரதமர் தலையில் விழுந்த‌‌ அடுத்த இடி...‌ வெளியான முக்கிய கருத்து கணிப்பு முடிவு...!

08:39 AM Nov 25, 2023 IST | 1newsnationuser2
அதிர்ச்சி     இஸ்ரேல் பிரதமர்  தலையில் விழுந்த‌‌ அடுத்த இடி   ‌ வெளியான முக்கிய கருத்து கணிப்பு முடிவு
Advertisement

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தேசிய ஒற்றுமைக் கட்சியின் தலைவர் 'காண்ட்ஸ்தான் பிரதமராக இருக்க மிகவும் பொருத்தமானவர்களா என்ற கேள்விக்கு பதிலளித்தவர்களில் 52% பேர் எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமைக் கட்சியின் தலைவர் 'காண்ட்ஸ்தான்' பொருத்தமானவர் என்று பதிலளித்துள்ளனர். 27% பேர் நெதன்யாகு என்றும் 21% பேர் தங்களுக்குத் தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

லிகுட் வாக்காளர்களிடம் எழுதிய கேள்விக்கு, 56% பேர் நெதன்யாகு நாட்டை வழிநடத்த வேண்டும் என்று இன்னும் நம்புவதாகக் கூறியுள்ளனர், அதே நேரத்தில் 26% பேர் காண்ட்ஸை ஆதரிப்பதாகக் கூறினர். மீதமுள்ள 18% பேர் தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர். அதே போல தேசிய ஒற்றுமைக் கட்சிக்குள், 98% வாக்காளர்கள் காண்ட்ஸைப் பிரதமராக ஆதரிப்பதாகக் கூறினர், அதே நேரத்தில் 2% பேர் தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர்.

ஹெண்டலிலிருந்து பிரிந்து வலதுசாரி லிபரல் கட்சியின் தலைவராக பென்னட் போட்டியிட்டால், அவர் 15 இடங்களை வெல்வார், ஹெண்டல் ஐந்து இடங்களை வெல்வார் என்று முடிவுகள் கண்டறிந்தன. பென்னட்டின் தலைமையில் இருவரும் இணைந்து போட்டியிட்டால், மொத்தம் 18 இடங்களில் வெற்றி பெறுவார்கள்.

பாலஸ்தீன விடுதலைக்காக போராடி வரும் ஹமாஸ் படையினர் கடந்த மாதம் 7ம் தேதி திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தினர். மட்டுமல்லாது பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்து எராளமானோரை பிணை கைதிகளாக பிடித்து வந்தனர். இந்த சம்பவம் இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 49 நாட்களாக இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்க்ள கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் குழந்தைகள் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போர் சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement