For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை..!! தபால் வாக்கு முறையில் மாற்றம்..?

08:11 AM Mar 23, 2024 IST | 1newsnationuser6
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை     தபால் வாக்கு முறையில் மாற்றம்
Advertisement

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இங்கு 4 முனைப் போட்டி நிலவுகிறது. பெரும்பாலும் கூட்டணிகளின் தொகுதிப்பங்கீடுகள் முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். மேலும், அரசியல் கட்சியின் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.

Advertisement

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ முன்னிலையில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தபால் வாக்கு செலுத்தும் முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடம் விவரிக்கப்படவுள்ளது.

Read More : திமுக கூட்டணியில் IUML கட்சிக்கு ’ஏணி சின்னம்’ ஒதுக்கீடு..!! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

Advertisement