For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மம்தா பானர்ஜி குறித்து அவதூறு கருத்து.. உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

07:37 PM May 17, 2024 IST | Mari Thangam
மம்தா பானர்ஜி குறித்து அவதூறு கருத்து   உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Advertisement

மம்தா பானர்ஜி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தம்லுக் தொகுதி பா.ஜ.க. வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement

மேற்கு வங்க மாநிலம், தம்லுக் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் அபிஜித் கங்கோபாத்யாய். கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியான இவர், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்து தேர்தலை சந்திக்கிறார். இதனிடையே கடந்த 15-ந்தேதி ஹல்தியா பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குறித்து தரக்குறைவான முறையில், மிகவும் மோசமான விமர்சனத்தை முன்வைத்தார்.

இது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. அந்தப் புகாரில், 'அபிஜித் கங்கோபாத்யாய், “மம்தா பானர்ஜி, நீங்கள் எவ்வளவுக்கு விற்கப்படுகிறீர்கள்? உங்கள் ரேட் ரூ.10 லட்சம்? அழகுகலை நிபுணர் மூலம் நீங்கள் மேக்கப் செய்து கொண்டீர்களா? மம்தா பானர்ஜி ஒரு பெண்ணா? நான் சில நேரங்களில் ஆச்சரியப்படுகிறேன்" என கூறியுள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக பா.ஜ.க. வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய் வரும் 20-ந்தேதி மாலை 5 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், அபிஜித் கங்கோபாத்யாய் பேசிய கருத்துக்கள் முறையற்ற, கண்ணியமற்ற வகையிலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement