AAM ADMI | "பாஜக-விற்கு துணை போகும் தேர்தல் ஆணையம்…" ஆம் ஆத்மி அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு.!!
AAM ADMI: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரசார பாடலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள எம்எல்ஏ அதிஷி மர்லேனா, தேர்தல் ஆணையத்தின் முடிவை விமர்சித்து தேசிய தலைநகரில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படுகிறது என அவர் குற்றம் சாட்டினார். மேலும் பாஜக அரசு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற அரசு இயந்திரங்களை பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை கைது செய்யும் போது தேர்தல் ஆணையம் ஒன்றும் செய்யாது. பொய்யான கைது நடக்கிறது என்று பிரச்சாரத்தில் சொன்னால் அது தேர்தல் வரம்பு மீறல் ஆகிறது. இவையெல்லாம் சர்வதிகார ஆட்சியின் அறிகுறி என அதிஷி மர்லேனா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்
டெல்லி கலால் கொள்கை வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று காலை ‘வாக் ஃபார் கெஜ்ரிவால்’ என்ற பெயரில் நடைப்பயணத்தை நடத்தினர். டெல்லியின் சிஆர் பூங்காவில் பிரச்சாரம் மற்றும் நடை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆம் ஆத்மி(AAM ADMI) ஆதரவாளர்கள் 'ஜெயில் கா ஜவாப் வோட் சே' என்ற முழக்கத்துடன் கெஜ்ரிவாலின் புகைப்படத்துடன் கூடிய கொடிகளை ஏந்தியவாறு நடை பயணத்தில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி அமைச்சர்கள் அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பதட்டமாக இருப்பதாக பரத்வாஜ் கூறினார். மேலும் பா.ஜ.க.வை கிண்டலடித்த அவர், "நாங்கள் இங்கு வாஷிங் மெஷின் பொருத்தியுள்ளோம், இந்த இயந்திரத்தில் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை வைத்தால் அவர் சுத்தமாக வெளியே வருகிறார்" என்றார்.