தெலுங்கானா முன்னாள் முதல்வர் KCR-க்கு 48 மணி நேர தடை.!! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை.!!
KCR: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏழாம் தேதி கர்நாடகா மற்றும் குஜராத் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 94 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற இருக்கிறது. என்னைத் தொடர்ந்து நான்காம் கட்ட வாக்குப் பதிவுகள் மே 13ஆம் தேதி நடைபெற இருக்கின்றன.
ஆந்திரா தெலுங்கானா உட்பட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது . தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாரத் ராஷ்ட்ரி சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவிற்கு(KCR) 48 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
சிர்சில்லா மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியின் போது காங்கிரஸ் கட்சி குறித்து தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கானா மாநிலம் காங்கிரஸ் துணைத் தலைவர் நிரஞ்சன் கொடுத்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
புகாருக்கு பதிலளித்த கேசிஆர், மாநிலத்தில் காங்கிரஸின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு மட்டுமே தனது விமர்சனம் இருப்பதாகக் கூறினார். காங்கிரஸ் தலைவர்கள் மீது தனிப்பட்ட விமர்சனங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அவர் மீதான தடை இன்று இரவு 8 மணி முதல் அமல்படுத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.