2024 பாராளுமன்றத் தேர்தல் முதல் குழந்தைகளுக்கு தடை..!! பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் .!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல்கள் வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் தேதிகள் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யும் பணிகளில் தேசியக் கட்சிகளும் மாநில கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மத்திய தேர்தல் ஆணையம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி தேர்தல் பரப்புரைகளில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தடை செய்து இருக்கிறது.
தேர்தல் பரப்புரைகளின் போது சிறுவர்களை பயன்படுத்துவது மற்றும் அவர்களிடம் நோட்டீஸ் விநியோகிக்க சொல்வது போன்றவற்றை தேர்தல் ஆணையம் தடை செய்திருக்கிறது. இந்த விதிமுறையை மீறுபவர்கள் மீது குழந்தை தொழிலாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது விதி மீறலில் சேராது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.