ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் தேர்தல் எப்போது..? - இந்திய தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்..!!
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் ( இசிஐ ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைக்கு மூன்று கட்டங்களாகவும், ஹரியானாவில் ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அறிவிப்பின்படி, ஜம்மு காஷ்மீர் வாக்காளர்கள் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 ஆகிய தேதிகளில் வாக்களிப்பார்கள், மேலும் மூன்றாம் கட்டம் ஹரியானாவுடன் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும். இரு மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். சீரான மற்றும் நியாயமான வாக்குப்பதிவுக்கு பாரபட்சமற்றதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்குமாறு தேர்தல் ஆணையம் அமலாக்க முகமைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் 74 பொது தொகுதிகளாகவும், 9 எஸ்டி மற்றும் 7 தனித் தொகுதிகளாகவும் உள்ளன. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி, செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதேநேரம், ஆகஸ்ட் 20, 29 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய நாட்களில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது. 2024, ஜூலை 25 அடிப்படையில், மொத்தம் 87.09 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மேலும், 11,838 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
ஹரியானா சட்டமன்றத் தேர்தல்:
ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சடமன்றத் தொகுதிகளில் 73 பொது தொகுதிகளாகவும், 17 தனித் தொகுதிகளாகவும் உள்ளனர். இந்த நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி ஒரே கட்டமாக ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி நிறைவடைகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 2, 2024 நிலவரப்படி, 2.01 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மேலும், இங்கு 20 ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Read more ; அதிர்ச்சி..!! தமிழ்நாட்டில் ரேஷன் கார்டில் இருந்து பல லட்சம் பேர் நீக்கம்..!! என்ன காரணம்?