முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சூப்பரான முட்டை ஆம்லெட் கறி.. சுவை அட்டகாசமா இருக்கும்.. செய்முறையும் சிம்பிள்.!

07:12 AM Jan 24, 2024 IST | 1newsnationuser5
Advertisement

ஒரே மாதிரி சாப்பிட்டு போரடித்து விட்டதா.? முட்டையை வைத்து இந்த அட்டகாசமான ரெசிபியை செய்து பாருங்கள். இதன் சுவை வித்தியாசமாகவும் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சுவையாகவும் இருக்கும். 

Advertisement

தேவையான பொருட்கள் :

முட்டை - 5, கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி, எண்ணெய் - 4 தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி, நறுக்கிய வெங்காயம் - 3, இஞ்சி-பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி,கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி, சீரகப் பொடி - 1 தேக்கரண்டி, நறுக்கிய பச்சை மிளகாய் -3, தக்காளி விழுது - 1/2 கப், சீரகம் - 1/2 தேக்கரண்டி, நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலைகள் - 1 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, தேங்காய் பால் - 1 கப்

செய்முறை: கடாயை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நுரை வரும் அளவிற்கு கலக்கவும். நறுக்கி வைத்ததில் பாதி வெங்காயத்தை போட்டு இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும். இதில் அரை ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், பாதி பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும். முட்டை நன்றாக ஆம்லெட் போல வரவேண்டும். அதுவரை இருபுறமும் திருப்பிப் போட்டு நன்றாக வேகவிட்டு வெந்தவுடன், இதை வேறொரு பாத்திரத்தில் மாற்றி மூடி வைக்கவும்.நாம் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் ஆம்லெட்டை துண்டு துண்டாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். 

பின், அதே கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சீரகத்தூள் சேர்த்து அது நிறம் மாறியதும் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது தக்காளியை அரைத்து அதில் ஊற்றி நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இதில் தேங்காய் பால், கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். நன்றாக இந்த கிரேவி கொதித்த உடன் அதில் நறுக்கி வைத்திருக்கும் ஆம்லெட் துண்டுகளை போட்டு லேசாக கிளறி கொத்தமல்லி இலை, புதினா இலையை தூவி இறக்கினால் சூப்பரான முட்டை ஆம்லெட் கறி ரெசிபி ரெடி.!

Tags :
Egg omlet
Advertisement
Next Article