இந்த காய்கறிகளை அளவுக்கு அதிகமாக உண்பதால் இவ்வளவு ஆபத்தா.?
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் ஒரு சில காய்கறிகளையும் அதிக அளவு சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். காய்கறிகள், பழங்கள் என்றாலே சத்துக்கள் நிறைந்தவை என்பதுதான் நமக்குத் தெரியும்.
ஆனால் நாம் அடிக்கடி உணவில் பயன்படுத்தி வரும் சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை அதிக அளவு உட்கொள்ளவதால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.
- கேரட் - இதில் அதிக அளவு பீட்டா கரோட்டின் என்ற சத்து நிறைந்துள்ளது. இந்த பீட்டா கரோட்டின் நம் உடலில் அதிகமானால் ரத்தச் செறிவு ஏற்ப்பட்டு தோலின் நிறம் மாறும்.
2. பீட்ரூட் - பொதுவாக பீட்ரூட் சாப்பிடுவது ஹீமோகுளோபினை உடலில் அதிகரித்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். ஆனால் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த அழுத்தம் ஏற்படும், சிறுநீரின் நிறம் சிவப்பாக மாறும், செரிமான கோளாறு போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் விளைவுகள் நிகழும். இதன்படி எந்த உணவுப் பொருட்களையும் சாப்பிட்டால் அளவுடன் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.