அதிர்ச்சி.! சிறுநீர் வரும்போது கட்டுப்படுத்துகிறீர்களா.? உங்களுக்குத்தான் இந்த செய்தி.!?
நம் உடலில் இயற்கையாக ஏற்படும் தும்மல், இருமல், விக்கல், சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்ற செயல்களை கட்டுப்படுத்தினால் பல்வேறு வகையான நோய் பாதிப்பிற்குள்ளாக நேரிடும். குறிப்பாக சிறுநீரை கட்டுப்படுத்தும் போது உடலில் பல நோய்கள் உருவாகின்றன என்று மருத்துவர்களும் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
நம் மூளை உடலுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த செய்கின்றது. இந்த உணர்வு வந்த பின்பும் ஒரு சிலர் சூழ்நிலையின் காரணமாகவோ, பொது இடத்தில் இருக்கும் போதோ சிறுநீர் கழிக்காமல் கட்டுப்படுத்தி வைக்கின்றனர். இதனால் உடலில் என்னென்ன நோய்கள் ஏற்படுகின்றன என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
சிறுநீர்ப்பையில் முழுவதுமாக சிறுநீர் நிறைந்ததும் இந்த உணர்வு ஏற்படும். இதனை கட்டுப்படுத்தும் போது சிறுநீர்ப்பை விரிவடைந்து வயிற்றில் வலி ஏற்படும். மேலும் சிறுநீர் பை சுவற்றில் அழுத்தம் ஏற்பட்டு பாதிப்புகள் உருவாகும். இதனால் சிறுநீர் குழாயில் கிருமி தொற்றுகள் ஏற்பட்டு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உருவாகும்.
மேலும் சிறுநீரை இவ்வாறு அடிக்கடி கட்டுப்படுத்தி வைக்கும் போது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். இது காலப்போக்கில் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படாமலே தன்னை மீறி சிறுநீர் வெளியேறும். இந்த பிரச்சனை தொடர்ந்தால் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயத்திற்கு வழிவகை செய்யும். இவ்வாறு சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்துவது சிறிய விஷயம் என்று நினைத்தாலும் இது உடலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.