முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’களத்திற்கு செல்லாத எடுபுடியே’..!! ’நாவை அடக்கு’..!! எடப்பாடியை கண்டித்து கமல் கட்சியினர் போஸ்டர்..!!

07:37 AM Dec 11, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சென்னை வெள்ள பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான் காரணம் என அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். மாறாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அரசு எடுத்த நடவடிக்கையால் தான் இரண்டு நாட்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்த விஷயத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், ‛‛மழை பாதிப்பு குறித்து அரசை குறை சொல்லும் நேரம் இதுவல்ல. அரசு எவ்வளவு தான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கை சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்த தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம்'' என தெரிவித்திருந்தார்.

2015 வெள்ளப்பெருக்கின்போது அதிமுவை கடுமையாக விமர்சனம் செய்த கமல்ஹாசன், தற்போது திமுகவுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில், இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுபற்றி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‛‛கமல்ஹாசன் ஒரு பச்சோந்தி போன்றவர், அவரை அரசியல்வாதியாக நான் மதிக்கவில்லை. அவர் கட்சியில் அவரை தவிர வேறு யாரும் இல்லை" என கூறினார்.

இந்நிலையில் தான் கமல்ஹாசனை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‛‛வன்மையாக கண்டிக்கிறோம். மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்காக களத்தில் நின்று கொண்டிருக்கும் நம்மவரை விமர்சிக்கும் களத்திற்கே செல்லாத எடுபுடியே! நாவை அடக்கு… தலை குனிந்து பதவி வாங்கிய எடப்பாடியே! நம்மவரை விமர்சனம் செய்ய உமக்கு தகுதி இல்லை'' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது வருகிறது.

Advertisement
Next Article