For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Education loan | மாஸ் அறிவிப்பு..!! 1,50,000 மாணவர்களின் கல்விக்கடன் ரத்து..!!

02:55 PM Feb 22, 2024 IST | 1newsnationuser6
education loan   மாஸ் அறிவிப்பு     1 50 000 மாணவர்களின் கல்விக்கடன் ரத்து
Advertisement

கல்வி கடன் பெற்றிருக்கும் 1,50,000 மாணவர்களின் அனைத்து கல்விக்கடனையும் ஜோ பைடன் நிர்வாகம் தள்ளுபடி செய்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

அமெரிக்காவில் இளங்கலை பட்டப்படிப்புக்கு கல்விக்கட்டணம் மிக அதிகம். கல்விக்கட்டணத்தை பெரும்பாலான பெற்றோர்களால் கட்ட முடியாததால், மேற்படிப்பைத் தொடராமல் பலர் வேலைக்கு சென்று விடுகின்றனர். படிப்பின் மீதான ஆர்வமுள்ளவர்கள் வங்கிகளில் கல்விக்கடன் பெற்று கல்லூரிப் படிப்பைத் தொடர்கின்றனர். ஆனாலும், தங்களது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்து விட்டு, வேலைக்கு செல்லும் போது அவர்களின் முன்பாக கல்விக்கடன் பெரும் சுமையாக நிற்கிறது.

எனவே, இந்த கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படிம் அதிபர் ஜோ பைடன் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக்கடனை ரத்து செய்வதாக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். இந்நிலையில், தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் தகுதியுடைய கிட்டத்தட்ட 1.53 லட்சம் பேருக்கு 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான மாணவர் கடன்களை ரத்து செய்வதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Read More : Farmers Protest | டெல்லியில் மேலும் ஒரு விவசாயி பலி..!! மீண்டும் பதற்றம்..!! பரபரப்பு..!!

Advertisement