For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Edappadi Palaniswami | ”போதை மாபியா தலைவனை ஊக்குவிக்கும் விடியா திமுக அரசு”..!! ஸ்டாலினை விளாசிய எடப்பாடி..!!

11:52 AM Mar 01, 2024 IST | 1newsnationuser6
edappadi palaniswami   ”போதை மாபியா தலைவனை ஊக்குவிக்கும் விடியா திமுக அரசு”     ஸ்டாலினை விளாசிய எடப்பாடி
Advertisement

போதை மாபியா தலைவனுக்கு முதல் குடும்பத்துடன் நெருக்கமும் அரசியல் பதவி பின்புலமும் அளித்து ஊக்குவித்த விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், ”தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. பெற்றோர்களே, தாய்மார்களே - இன்றைய தலைமுறையினரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முழுமையாக சீரழிக்கும் இந்த போதைப்பொருட்களில் இருந்து நாம் தான் நம் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும்.

மதுரையில் பலகோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தோமெட்டபைன் போதைப்பொருள் இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இன்னும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கஞ்சா, கொக்கைன், ஹெராயின் என வளர்ந்து இன்றைக்கு மெத் வரை நீளும் அனைத்து போதைப் பொருட்களும் சர்வசாதாரணமாகப் புழங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை திமுக அரசு மாற்றியிருப்பது மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உரியது.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே சவக்குழியில் தள்ளும் இந்த போதைப் பொருள் புழக்கத்தை தடுக்காமல், போதை மாபியா தலைவனுக்கு முதல் குடும்பத்துடன் நெருக்கமும் அரசியல் பதவி பின்புலமும் அளித்து ஊக்குவித்த விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய கடும் கண்டனம்” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : ADMK | இந்தியா கூட்டணியில் இணையும் அதிமுக..? எடப்பாடி பக்கம் சாயும் காங்கிரஸ்..? அதிர்ச்சியில் திமுக..!!

Advertisement