"ஸ்டாலின் குடும்பத்திற்கும் ஜாபர் சாதிக்கிற்கும் உள்ள தொடர்பு என்ன.." நீதி விசாரணைக்கு EPS கோரிக்கை.!
தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக குற்ற சம்பவங்களும் அதிகரித்திருக்கும் நிலையில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்திருக்கிறார்.
வெளிநாடுகளுக்கு போதை மருந்துகள் கடத்திய விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு மூளையாக செயல்பட்ட திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கும் திமுக குடும்பத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருந்தார்.
தொடர்ந்து அதிகரித்து வரும்போது புழக்கத்திற்கு எதிராக வருகின்ற 12ஆம் தேதி அதிமுக சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தார் . இந்நிலையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த கோரியும் ஸ்டாலின் குடும்பத்திற்கும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி இருக்கும் ஜாபர் சாதிக் இருக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநரை சந்தித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த சந்திப்பின்போது ஜாபர் சாதிக் மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினர் இடையே உள்ள தொடர்பு பற்றி சுதந்திரமான நீதி விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் போதை புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.