For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டெல்லியில் பரபரப்பு... கைது செய்யப்பட்ட முதல்வரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் ED...!

05:32 AM Mar 22, 2024 IST | 1newsnationuser2
டெல்லியில் பரபரப்பு    கைது செய்யப்பட்ட முதல்வரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் ed
Advertisement

டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.

Advertisement

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இரண்டாம் கட்டமாக மணீஷ் சிசோடியா டெல்லி சிபிஐ அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையில் விளக்கம் திருப்திகரமாக இல்லை என கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அவரை கைது செய்தது. இன்று வரை அவர் சிறையில் உள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை முதல்வர் கேஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. இந்த சம்மன்களை எதிர்த்து கேஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சுரேஷ் குமார் கெய்த், மனோஜ் ஜெயின் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. கேஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அவர் கூறும்போது, “மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் முதல்வர் கேஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத் துறை முயற்சி செய்கிறது. இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றார்.

கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேஜ்ரிவால் தரப்பில் கோரப்படுகிறது. இப்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22-ம் தேதி நடைபெறும்" என்று தெரிவித்தனர். கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள கேஜ்ரிவாலின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இரவு 9.20 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.

Advertisement