முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ED சோதனை நிறைவு...! முக்கிய ஆவணங்களை எடுத்து சென்ற அதிகாரிகள்...!

ED raids at Minister Duraimurugan's house complete
06:51 AM Jan 04, 2025 IST | Vignesh
Advertisement

அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றது.

திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் அருகே காட்பாடியில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2019 மக்களவைத் தேர்தலில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது, 2019 மார்ச் 30-ம் தேதி அமைச்சர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.10 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் பூஞ்சோலை சீனிவாசன், உறவினர் தாமோதரன் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ.11 கோடியே 51 லட்சத்து 800 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், சுமார் ரூ.9 கோடி 200 ரூபாய் புத்தம் புதிய நோட்டுகளாக இருந்தது. 2019-ல் வருமான வரி சோதனை நடந்த இடங்களில் தற்போது அமலாக்கத் துறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சிஆர்பிஎப் காவலர்கள் பாதுகாப்புடன் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, துரைமுருகனுக்கு நெருங்கிய கட்சி பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன், இவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் வீடுகளில் நேற்று காலை 7 மணியளவில் சோதனை மேற்கொண்டனர். அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இருந்தார். எம்.பி. கதிர் ஆனந்த் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார்.

இதனால், அமைச்சரின் வீட்டில் மட்டும் சோதனை தொடங்காத நிலையில் மற்ற இடங்களில் சோதனை நடைபெற்றது. அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதுதொடர்பாகக் கதிர் ஆனந்த் தரப்பிலிருந்து இ-மெயில் அனுப்பினால் அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்படும் என திமுக முக்கிய நிர்வாகிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். காட்பாடி திமுக கிளை செயலாளர் வன்னியராஜா, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் சோதனை நடத்த கதிர்ஆனந்த் தரப்பிலிருந்து அமலாக்கத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உதவியாக பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சென்றனர். துரைமுருகன் வீட்டில் அமைச்சரின் தனி அறை பூட்டியிருந்ததால் அந்த அறையின் பூட்டைஉடைக்க, இரும்பு கடப்பாரையை வீட்டினுள் கொண்டு சென்றனர். நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நிறைவு பெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Tags :
duraimuruganEnforcement directorateKatpadivellore
Advertisement
Next Article