அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களில் ED ரெய்டு!. அன்னிய முதலீட்டு விதிகளை மீறியதாக புகார்!
ED Raid: அமேசான்' மற்றும் 'பிளிப்கார்ட்' நிறுவனங்கள், அன்னிய முதலீட்டு விதிகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அந்த தளங்களின் விற்பனையாளர்களுக்கு சொந்தமான சில இடங்களில் அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள், 'ஆன்லைன்' வாயிலாக பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. நம் நாட்டின் அன்னிய முதலீடு விதிகளின்படி, இந்த இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக பொருட்களை விற்க முடியாது. இவற்றில் இணைந்துள்ள விற்பனையாளர்கள் வாயிலாகத்தான் பொருட்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் சில குறிப்பிட்ட விற்பனையாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பெருவாரியான பொருட்களை அவர்கள் வாயிலாக விற்பனை செய்வதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் குற்றஞ்சாட்டியது.
இதில், பெரும்பாலான விற்பனையாளர்கள், 'வால்மார்ட்' நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த இரு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் அன்னிய முதலீட்டு விதிகளை மீறியது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணையை துவக்கியது.
இதன் ஒரு பகுதியாக, இரு நிறுவனங்களிலும் பதிவு பெற்றுள்ள விற்பனையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். டில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால், விற்பனையாளர்களின் பெயர்களை அமலாக்கத் துறை வெளியிடவில்லை.
Readmore: டெல்டா மக்களே அலர்ட்…! இந்த 13 மாவட்டத்தில் இன்று கனமழை…! மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம்