டெல்லி எம்எல்ஏ குலாப் சிங் வீட்டில் ED சோதனை..! "சர்வாதிகாரப் பாதை" பிஜேபியை சாடிய ஆம் ஆத்மி..!
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ED காவலுக்கு சென்ற ஒரே நாளில் ஆம் ஆத்மி எம்எல்ஏ குலாப் சிங் வீட்டில் சோதனை நடந்துள்ளது. இதனை "உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் இப்போது சர்வாதிகாரப் பாதையில் செல்கிறது" என்று ஆம் ஆத்மி கட்சி விமர்சனம் செய்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபான கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மதுபான மண்டலங்கள் உருவாக்கப்பட்டு 849 விற்பனை நிலையங்களில் சில்லறை விற்பனைக்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
டெல்லி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, புதிய மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் பெருமளவு ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவித்ததை அடுத்து சிபிஐ நடத்திய விசாரணையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் தொடர்ந்து ஆஜராகாமால் இருந்தார். மேலும் இது தொடர்பாக கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
நீதிமன்றம் ஜாமின் வழங்கிய பிறகும், அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பிய நிலையில் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் “தான் விசாரணைக்கு ஆஜரானால் கைதுசெய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும்” என புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கோரிக்கையை நிராகரித்தார், மேலும் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தார்.
இந்நிலையில் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை(ED) மார்ச் 21ஆம் தேதி கைது செய்துபட்டர். மார்ச்சு 22ஆம் தேதியின் நேற்று. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் 28-ஆம் தேதி வரை கெஜ்ரிவாலை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ குலாப் சிங் வீட்டில் அமலாக்க இயக்குனரகம் இன்று (மார்ச் 23) சோதனை நடத்தியது. அதிகாலை 3 மணியளவில் ED குழு குலாப் சிங் வீட்டில் சோதனை நடத்தியதாகவும், எந்த வழக்கின் கீழ் இந்த சோதனை நடத்தப்படுகிறது என்பது தெரியவில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் ED காவலுக்கு அனுப்பப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த சோதனை நடந்துள்ளது. குலாப் சிங், டெல்லியின் மத்தியாலா சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ. வாகவும் ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் பிரிவு பொறுப்பாளராகவும் உள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ குலாப் சிங் மீதான ED ரெய்டு தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடிய டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான சவுரப் பரத்வாஜ், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு "இப்போது சர்வாதிகாரப் பாதையில் செல்கிறது" என்று குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், "ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் சிறையில் அடைப்பதில் பாஜக அரசு மும்முரமாக உள்ளது என்பதை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இப்போது சர்வாதிகாரப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது, மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகிறது, எதிர்க்கட்சிகள் இல்லாத சூழ்நிலையிற் உருவாக்கி நினைக்கிறது. பாஜக ரஷ்யாவின் பாதையை பின்பற்றுகிறது. பங்களாதேஷ், பாகிஸ்தான், வடகொரியா போன்ற நாடுகளில் காணப்பட்டது, இப்போது இந்தியாவும் அதே பாதையில் செல்கிறது.
ஆம் ஆத்மீ கட்சியின் 4 தலைவர்கள் பொய் வழக்குகளில் சிறையில் உள்ளனர். நாங்கள் குஜராத்தில் போட்டியிடுவதால், குஜராத் பொறுப்பாளர் குலாப் சிங் யாதவ் வீட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், இதனால் பிற எதிர்க்கட்சிகள் பயந்து அமைதியாக இருக்கின்றன" என்று டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான சவுரப் பரத்வாஜ் கூறினார்.
Also Read: ”இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக் கூடாது”..!! தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு மனு..!!