ஜாபர் சாதிக் மனைவியிடம் சுமார் 8 மணி நேரம் ED விசாரணை...!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகி மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனுமான ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணையானது நடைபெற்றுள்ளது. விசாரணை போது அவரது மனைவியிடம் போதை கடத்தல் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இதுவரை ரூ. 2,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்தும் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பதிவு செய்த வழக்கில் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமலாக்க இயக்குனரகம் சாதிக்கின் மனைவி ஆமினாவை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு வரவழைத்தது, அங்கு சுமார் 8 மணி நேரம் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரல் இரண்டாவது வாரத்தில், சென்னை மற்றும் பிற இடங்களில் சாதிக்குடன் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. பிப்ரவரியில் என்சிபியின் டெல்லி பிரிவால் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட பிறகு, சாதிக் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் தலைமறைவாக இருந்தார், இறுதியாக மார்ச் 9 அன்று கைது செய்யப்பட்டு தற்பொழுது சிறையில் உள்ளார்.