சைலண்டாக நடந்த சம்பவம்...! டெல்லியில் வைத்து காங்கிரஸ் MP கார்த்தி சிதம்பரத்திடம் ED விசாரணை...!
விசா வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி-யான கார்த்தி சிதம்பரம் ஆஜரானார்.
சிவகங்கையைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., 2011-ம் ஆண்டு சில சீன பிரஜைகளுக்கு விசா வழங்கியது தொடர்பான பணமோசடி வழக்கில், 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் சனிக்கிழமை விசாரணைக்காக ஆஜரானார். 2011-ம் ஆண்டு அவரது தந்தை சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி விசா அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பஞ்சாபில் சீன நிறுவனத்துடன் இணைந்து வேதாந்தா குழுமம் மின் திட்டத்தைச் செயல்படுத்தியது. இதற்காக சீன நிறுவனத்தைச் சேர்ந்த 263 பேரை இந்தியாவுக்கு வரவைக்க விதிகளை மீறி விசா பெறுவதற்காக கார்த்தி சிதம்பரத்துக்கு வேதாந்தா குழுமம் ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
விசா மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி-யான கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என்று அண்மையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி விசாரணைக்காக, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி-யான கார்த்தி சிதம்பரம் ஆஜரானார்.