For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

FEMA தொடர்பாக 'BYJU'S' நிறுவனர் ரவீந்திரன் மீது 'லுக் அவுட்' சுற்றறிக்கை.! அமலாக்க இயக்குனரகம் அதிரடி.!

02:17 PM Feb 22, 2024 IST | 1newsnationuser4
fema தொடர்பாக  byju s  நிறுவனர் ரவீந்திரன் மீது  லுக் அவுட்  சுற்றறிக்கை   அமலாக்க இயக்குனரகம் அதிரடி
Advertisement

பைஜூ நிறுவனத்தின் இயக்குனரான ரவீந்திரனுக்கு எதிராக 'லுக் அவுட்' சுற்றறிக்கையை அமலாக்க இயக்குனரகம் கோரியுள்ளது. அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்ட (FEMA) மீறுதல்களுக்காக விசாரணை செய்யவும், எட்டெக் மேஜரின் நிறுவனருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement

ரவீந்திரன் தற்போது துபாயில் இருப்பதாகவும், பின்பு சிங்கப்பூர் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியேற்ற பணியகத்திடமிருந்து, அமலாக்க இயக்குனரகம் 'LOC' எனப்படும் கட்டுப்பாட்டுக் கோட்டை பற்றிய விபரங்களை கோரியுள்ளது.

ரவீந்திரன் வெளிநாடு செல்வதை ஏஜென்சி தடுக்க விரும்பியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரவீந்திரனுக்கு எதிராக, LOC 'ஆன் இன்டிமேஷன்' வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் வெளிநாடு செய்வதை தடை செய்யாமல், அவர் வெளிநாடு செல்வதற்கான திட்டங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சில முதலீட்டாளர்கள் ரவீந்திரனை நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற முயற்சித்த போது, கர்நாடக உயர்நீதிமன்றம், நிறுவனத்தின் சிறப்பு பொதுக் கூட்டத்தில் எடுத்த எந்த முடிவுகளும் அடுத்த விசாரணை வரை பொருந்தாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு ரவீந்திரனுக்கு சாதகமாகிப் போனது.

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பைஜூஸ் நிறுவனம் பல சவால்களை சந்தித்து வருகிறது. பைஜூ நிறுவனத்தின் தணிக்கையாளர் ராஜினாமா செய்தது, பைஜு நிறுவனத்துடன் இணைந்த மற்ற நிறுவனங்களுக்கு எதிராக திவால் நடவடிக்கைகளை மேற்கொண்டது, கடனை திருப்பிச் செலுத்துவதில் அமெரிக்காவில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் போன்ற பல சிக்கல்களை பைஜூ நிறுவனம் சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் அட்லாண்டிக், பீக் XV பார்ட்னர்ஸ் மற்றும் சான் ஜுக்கர்பெர்க் இனிஷியேட்டிவ் போன்று உலகளாவில் மதிக்கப்படக்கூடிய பங்குதாரர்களை பைஜூ நிறுவனம் கொண்டுள்ளது. பைஜு நிறுவனம் 2022இல், ரவீந்திரனின் தலைமையின் கீழ் $22 பில்லியன் மதிப்பை பெற்றது. தற்போது தனது முந்தைய மதிப்பிலிருந்து 99 சதவிகிதம் குறைந்து, $200 மில்லியன் மதிப்பை பெற்றுள்ள அந்த நிறுவனம் தற்போது உரிமைச் சிக்கலை சந்தித்து வருகிறது.

English summary: The enforcement directorate has issued a 'look out' circular against Byju's director Raveendran regarding FEMA violations.

Read More: WhatsApp பயனர்களுக்கு குட் நியூஸ்.! இனி விருப்பமான ஃபார்மெட்டில் மெசேஜ் அனுப்பும் புதிய வசதி.! இதன் சிறப்புகள் பற்றிய முழு விபரம.!

Tags :
Advertisement